புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 30 ஆகஸ்ட் 2020 (08:11 IST)

இங்கிலாந்து-பாகிஸ்தான் டி20 தொடர்: இன்றும் மழை வெற்றி பெறுமா?

இங்கிலாந்து-பாகிஸ்தான் டி20 தொடர்: இன்றும் மழை வெற்றி பெறுமா?
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது என்பது தெரிந்ததே. ஏற்கனவே நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 28ம் தேதி நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 6 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்திருந்த நிலையில் திடீரென மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டு அதன்பின் மழை தொடர்ந்ததால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது
 
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையே இன்று 2வது டி20 போட்டி நடைபெற உள்ளது. ஆனால் இன்றைய போட்டியும் மழையால் பாதிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இன்று போட்டி நடைபெறும் மான்செஸ்டர் மைதானத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இங்கிலாந்து வானிலை அமைப்பு கூறியுள்ளதால் இன்றைய போட்டியும் மழையால் பாதிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.