புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 21 ஜூலை 2019 (08:22 IST)

உலகக்கோப்பை போலவே டி.என்.பி.எல் போட்டியிலும் சூப்பர் ஓவர்

சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் மோதிய நிலையில், இரண்டு அணிகளும் சமமான ரன்கள் எடுத்ததால் போட்டி 'டை' ஆனது. இதனையடுத்து சூப்பர் ஓவர் போடப்பட்டது. இந்த சூப்பர் ஓவரிலும் இரண்டு அணிகளும் சம ரன்கள் எடுத்ததால் போட்டியின் விதியின்படி இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே
 
இந்நிலையில் தற்போது டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த ஒரு போட்டியில் திருச்சி மற்றும் காரைக்குடி அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த காரைக்குடி காளை அணியினர் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தனர். இதனையடுத்து 172 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய திருச்சி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து அதே 171 ரன்களை எடுத்தனர். இதனால் போட்டி 'டை' ஆனது
 
இதனை அடுத்து வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் வீசப்பட்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணி 2 விக்கெட்டுகளை இழந்து 11 ரன்கள் எடுத்தது. அதன் பின் விளையாடிய காரைக்குடி காளை அணி 4 பந்துகளில் 13 ரன்கள் எடுத்ததால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது
 
இதேபோல் நேற்று நடந்த இன்னொரு டிஎன்பிஎல் போட்டியில் மதுரை அணி, தூத்துக்குடி அணியை வென்றது. தூத்துக்குடி அணி முதலில் பேட்டிங் செய்து 124 ரன்கள் எடுத்த நிலையில் மதுரை அணி 12.2 ஓவர்களிலேயே 128 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது