புரோ கபடி: தெலுங்கு டைட்டான்ஸ், புனே அணிகள் வெற்றி
புரோ கபடி லீக் போட்டிகள் கடந்த 7ஆம் தேதி ஆரம்பித்து விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் தெலுங்கு டைட்டன்ஸ் மற்றும் புனே அணிகள் வெற்றி பெற்றது.
நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி பாட்னா பைரேட்ஸ் அணியுடன் மோதியது. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக விளையாடி வந்த நிலையில் இரு அணிகளின் புள்ளிகளும் ஏறத்தாழ சமமாக இருந்து வந்தது. கடைசி நேரத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி வீரர்கள் சிறப்பாக விளையாடியதால் 35-31 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் பாட்னா அணியை வீழ்த்தியது
இதேபோல் நேற்று நடைபெற்ற இன்னொரு ஆட்டத்தில் புனே அணி ஜெய்ப்பூர் அணி 29-25 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது. இந்த நிலையில் இதுவரை 24 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் ஏ பிரிவில் புனே, மும்பை மற்றும் ஹரியானா அணிகள் முதல் மூன்று இடங்களிலும், பி பிரிவில் தெலுங்கு டைட்டன்ஸ், பாட்னா பைரேட்ஸ் மற்றும் பெங்களூரு அணிகள் முதல் முன்று இடங்களிலும் உள்ளது. பி பிரிவில் உள்ள தமிழ் தலைவாஸ் அணி 7 புள்ளிகள் மட்டுமே பெற்று கடைசி இடத்தில் உள்ளது