தோல்வியிலிருந்து மீளுமா தமிழ்தலைவாஸ்? பெங்களூர் அணியுடன் இன்று மோதல்

kabbadi
Last Modified புதன், 17 அக்டோபர் 2018 (13:30 IST)
தொடர் தோல்விகளை சந்தித்துவரும் தமிழ் தலைவாஸ் அணி இன்று பெங்களூர் அணியுடன் மோத இருக்கிறது.
 
அஜய் தாகூர் தலைமையிலான தமிழ்தலைவாஸ் அணி முதல் லீக் ஆடத்தில் பாட்னா பைரேட்ஸுடன் மோதியது. சிறப்பாக விளையாடிய தமிழ் தலைவாஸ் அணி 42-26 என்ற புள்ளிக்கணக்கில் பாட்னாவை வீழ்த்தியது. 
 
ஆனால் அதன் பின் விளையாடிய நான்கு ஆட்டங்களிலும் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியை தழுவியது. உ.பி. அணி, தெலுங்கு அணி, பெங்கால் அணி, பெங்களூர் அணி ஆகிய 4 அணிகளுடன் மோதி தோல்வியையே தழுவியது. இதனால் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் ஆழ்ந்தனர்.
 
இந்நிலையில் தமிழ்தலைவாஸ் அணி முந்தைய போட்டியில் கண்ட தோல்விகளுக்கெல்லாம் பதிலடி கொடுக்க காத்துக் கொண்டிருக்கிறது என அணியின் பயிற்சியாளர் எடச்சேரி பாஸ்கரன் கூறியிருக்கிறார். அதன்படி தமிழ் தலைவாஸ் பெங்களூர் புல்ஸ் அணியை சந்திக்க இருக்கிறது. இப்போட்டியில் யார் வெற்றி பெற போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


இதில் மேலும் படிக்கவும் :