வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 24 ஜூலை 2018 (13:19 IST)

தேசிய ஜூனியர் தடகளப் போட்டி - தங்கம் வென்ற தமிழக வீரர்

தேசிய ஜூனியர் தடகளப் போட்டியில் தமிழக வீரர் கே.கோகுல் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 
குஜராத் மாநிலம் வடோதராவில் 15-வது தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் தமிழகத்தை சார்ந்த பலர் கலந்து கொண்டு விளையாடினர்.
 
இதில் தமிழக வீரர் கே.கோகுல் ஆண்களுக்கான ‘டிரிபிள்ஜம்ப்’ போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். அதேபோல் தமிழக வீராங்கனை தபிதா 100 மீட்டர் தடை ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
 
இதன்மூலம் இவர்கள் இருவரும் உலக ஜூனியர் தடகளப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டனர்.