திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 27 ஜூன் 2024 (21:43 IST)

டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு.. ஆரம்பத்திலேயே விக்கெட்டுக்களை இழந்த இந்தியா..!

உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் அரை இறுதி போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் முதல் அரைஇறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி அபாரமாக வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது என்பது தெரிந்தது. 
 
இந்த நிலையில் இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான அரைஇறுதி போட்டி நடைபெற்று வரும் நிலையில் மழை காரணமாக இந்த போட்டி கால தாமதமாக தொடங்கியது. 
 
இதனை அடுத்து சற்றுமுன் இந்த போட்டி தொடங்கிய நிலையில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி வந்து பந்துவீச்சை தேர்வு செய்ததை அடுத்து தற்போது இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. 
 
சற்றுமுன் வரை இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 42 ரன்கள் எடுத்துள்ளது என்பதும் ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் களத்தில் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவரும் 9 மற்றும் 4 ரன்களில் ஆட்டம் இழந்துள்ளனர். இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் இறுதி போட்டிக்கு தகுதி பெறலாம் என்ற நிலையில் இந்திய அணியின் ஆட்டம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Mahendran