கோலி அனுஷ்காவைப் பற்றி மோசமான வர்ணனை – சுனில் கவாஸ்கரை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!
நடந்து முடிந்த இரண்டு போட்டிகளிலும் ஆர் சி பி அணி கேப்டன் விராட் கோலி மிகவும் மோசமாக விளையாடியது ரசிகர்களை அதிருப்தியடைய செய்துள்ளது.
நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் கே எல் பஞ்சாப் அணியும் ஆர்சிபி அணியும் மோதின. இந்த போட்டியில் பஞ்சாப் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியைப் பெற்றது. ஆர் சி பி அணியின் தோல்விக்கு மிக முக்கியக் காரணமாக அமைந்தார் கோலி. முந்தைய போட்டியிலும் மோசமான ஆட்டத்தையே அவர் வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் இதுகுறித்து வர்ணனை செய்த சுனில் கவாஸ்கர் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவின் தனிப்பட்ட வாழக்கையை கேலி செய்யும் விதமாக ஆபாசமாக பேசினார். இது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்த அவரை வர்ணனையாளர்கள் குழுவில் இருந்து நீக்கவேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.