வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : ஞாயிறு, 27 ஆகஸ்ட் 2017 (18:31 IST)

பும்ரா பந்துவீச்சில் திணறிய இலங்கை; தொடர் வெற்றியில் இந்தியா

மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்துள்ளது.


 

 
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றிப்பெற்றது குறிப்பிடத்தக்கது.
 
டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்து வரும் இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிறகு 217 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகள் சாய்தார். 
 
முதல் இரண்டு விக்கெட்டுகள் வீழ்ந்த பிறகு சண்டிமால் மற்றும் லகிரு திருமண்ணே ஆகியோர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இலங்கை அணி 200 ரன்களை கடந்தது. திருமண்ணே அதிகபட்சமாக 80 ரன்கள் குவித்தார்.