புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 14 ஜனவரி 2020 (16:51 IST)

பஞ்சதந்திரத்தில் நான் நடிக்க வேண்டியது – கமலின் அழைப்பை மறுத்த கிரிக்கெட் வீரர் !

இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும் தற்போதைய வரணனையாளருமான ஸ்ரீகாந்த் தன்னை கமல் பஞ்சதந்திரம் படத்தில் நடிக்க அழைத்ததாகக் கூறியுள்ளார்.

இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரராக புகழ்பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த கிருஷ்ணாமாச்சாரி ஸ்ரீகாந்த் தற்போது வரணனையாளராக இருந்து வருகிறார். அவரது தமிழ் வர்ணனைகளைப் கே என்ற தனியான ரசிகர் கூட்டம் உருவாகியுள்ளது. அதே போல அவர் மரியாதைக் குறைவாக பேசுவதாக விமர்சனங்களும் உண்டு.

இந்நிலையில் அவர் முக்கியமான தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளார். இன்று இந்தியா ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டியின் போது ரசிகர் ஒருவர், கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப் படுவதை போல  ’உங்கள் வாழ்க்கையை திரைப்படமாக எடுத்தால் அதில் யாரை நடிக்க தேர்வு செய்வீர்கள் ?’ என கேட்டார்.
 

அதற்கு பதிலளித்த ஸ்ரீகாந்து அதுபோன்ற யோசனை எதுவும் இல்லை எனக் கூறிவிட்டு ’பஞ்சதந்திரம் படத்தில் நடிக்க தன்னை நடிகர் கமலஹாசனும் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமாரும் அழைத்தார்கள்.  ஆனால் அப்போது என்னால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது’ எனக் கூறியுள்ளார்.