1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 11 ஜனவரி 2025 (16:26 IST)

140 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி.. சொந்த மண்ணில் தோல்வியடைந்த நியூசிலாந்து..!

இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள நிலையில் ஏற்கனவே டி20 தொடரில் விளையாடி முடித்துள்ள நிலையில் தற்போது ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது.

டி20 தொடரில் 2 போட்டிகளில் நியூசிலாந்து அணியும் ஒரு போட்டியில் இலங்கையும் வென்ற நிலையில் ஒருநாள் தொடரிலும் முதல் இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

இந்த நிலையில் மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் தொடரில் இலங்கை அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து எட்டு விக்கெட் இழப்பிற்கு 290 ரன்கள் எடுத்த நிலையில் 291 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி 140 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதால் இலங்கை வெற்றி பெற்றது.

இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணையின் பெர்னாண்டா அபாரமாக பந்து வீசி 3 கட்டுகளை வீழ்த்தியதை அடுத்து அவர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். மேட் ஹெண்ட்ரி தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



Edited by Mahendran