செவ்வாய், 21 மார்ச் 2023
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified புதன், 23 நவம்பர் 2022 (22:41 IST)

உலகக் கோப்பை கால்பந்து போட்டி: ஜெர்மனியை வீழ்த்தி ஜப்பான் வெற்றி

world cup jappan
இன்றைய உலகக்கோப்பை லீக் போட்டியில்,  2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பான், பலமிக்க ஜெர்மனியை வீழ்த்தியது.

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அரசு  நாடுகளில் ஒன்றான  கத்தாரில் 22 வது உலகக் கோப்பைக் கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்போட்டியைக் காண உலகம் முழுவதிலும் இருந்து கால்பந்து ரசிகர்கள் கத்தாரில் குவிந்துள்ளனர்.

இன்றைய  லீக் ஆட்டத்தில் குரூப் –இ பிரிவில் ஜெர்மனி- ஜப்பான் அணிகளுக்கு இடையே நடந்த லீக் ஆட்டத்தில், 4 முறை உலகக் கோப்பை வென்ற ஜெர்மனியை வீழ்த்தி ஜப்பான் வென்றது.

இரு அணிகளும் தலா 1 கோல் அடித்திருந்த நிலையில்,  83 வது  நிமிடத்தில், ஜப்பான் அணியின் டகுமா அசோனோ இரண்டாவது கோல் அடிக்க ஜப்பான் வெற்றி உறுதியானது.
எனவே 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பான், பலமிக்க ஜெர்மனியை வீழ்த்தியது.

Edited by Sinoj