1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 9 ஜூன் 2019 (08:54 IST)

நீங்கள் பணத்துக்காத்தானே போனீர்கள் – டிவில்லியர்ஸை வெளுத்து வாங்கிய அக்தர் !

தென் ஆப்பிரிக்க அணி உலகக்கோப்பைப் போட்டியில் தொடர்ந்து தோல்வி அடைந்து வரும் நிலையில் அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ் மீண்டும் அணிக்குத் திரும்ப ஆசைப்படுவதாக  ஒரு செய்தி கடந்த சில நாட்களாக உலாவர ஆரம்பித்துள்ளது.
 

தென் ஆப்பிரிக்கா அணி உலகக்கோப்பை தொடர்களில் வழக்கமாக நாக் அவுட் சுற்றுகளில்தான் சொதப்பும். ஆனால் இந்த முறை லீக் போட்டிகளிலேயே ஹாட்ரிக் தோல்வி அடைந்து மிக மோசமான நிலையில் உள்ளது. இதற்கு அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான டிவில்லியர்ஸ் இல்லாததும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. கடந்த முறை தென் ஆப்பிரிக்க அணியை அரை இறுதி வரை சிறப்பாக வழிநடத்தினார் டிவில்லியர்ஸ்.

ஆனால் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் கடந்த ஆண்டு அதிர்ச்சியளிக்கும் விதமாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது உலகக் கிரிக்கெட் ரசிகர்களிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. ஆனால் ஐபிஎல் உள்ளிட்ட பல டொமஸ்டிக் போட்டிகளில் விளையாடி வருகிறார். இதனால் அவர் மேல் விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இந்நிலையில் உலகக்கோப்பைப் போட்டிகள் தொடங்குவதற்கு முன்னதாக டிவில்லியர்ஸ் தனது ஓய்வு முடிவை திரும்பப் பெற்று உலகக்கோப்பை போட்டிகளில் விளையாட விரும்புவதாக அணி நிர்வாகத்திடம் தெரிவித்திருக்கிறார். ஆனால் அதனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நிராகர்த்துள்ளது.

டிவில்லியர்ஸின் இந்த அறிவிப்பு குறித்து முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் காட்டமாக விமர்சனம் செய்துள்ளார். அதில் ‘ தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் மற்றும் பிஎஸ்எல் போன்ற லீக் போட்டிகளில் விளையாடுவதில் இருந்து விலகி உலகக்கோப்பைக்குத் தொடருக்கு அவரைத் தயாராக சொன்னபோது, பணம்தான் முக்கியம் நாடு முக்கியமில்லை என சொல்லி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றீர்கள். இப்போது மட்டும் என்ன நாட்டு மீது பற்று. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் செய்தது முழுவதும் சரியே.’ என வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.