புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 7 ஜூன் 2019 (13:37 IST)

தோனி என்ன போருக்கா போயிருக்கார்… பொங்கிய அமைச்சர் – விஸ்வரூபம் எடுக்கும் கிளவுஸ் சர்ச்சை !

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியின் போது தனது கிளவுஸில் தோனி இந்திய ராணுவப் பிரிவின் லச்சினையை தனது கிளவுஸில் பொறித்திருந்தது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் தென் ஆப்பிரிக்கா அணியுடனான லீக் ஆட்டத்தில் இந்தியா தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.  அந்த போட்டியில் தோனி நேற்று கீப்பிங் செய்த போது அணிந்திருந்த கிளவ்ஸில் இந்தியாவின் பாராமிலிட்டரி சிறப்பு படையின் ”பாலிதான்” என்ற முத்திரை பதிக்கப்பட்டிருந்தது. இந்த முத்திரையின் இந்திய ராணுவத்தினரின் தியாகத்தைக் குறிக்கும் முத்திரை இதுவாகும். 

கடந்த 2011 ஆம் ஆண்டு தோனிக்கு ராணுவத்தில் கவுரவ லெப்டிணண்ட் பதவி அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து தோனி 2015 ஆம் ஆண்டு பாராமிலிட்டரி பிரிவில் பயிற்சி மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.  இதனால் அவர் இந்த முத்திரையை தனது கிளவுஸில் குத்தியதாக தெரிகிறது. இதனையடுத்து தோனி ரசிகர்களும் இந்திய ஊடகங்களும் இதை ஊதிப் பெரிதாக்கி தோனியின் நாட்டுப்பற்று எனப் பேச ஆரம்பித்தன.

இதனால் கடுப்பான ஐசிசி, தோனியின் கிளவுஸில் இருக்கும் முத்திரை அகற்றப்படவேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருக்கும் பவாத் சவுத்ரி தனது பதிவில் ‘இங்கிலாந்துக்கு தோனி கிரிக்கெட் விளையாடத்தான் சென்றுள்ளார். மகாப்பாரதப் போருக்கு ஒன்றும் செல்லவில்லை. இந்த விஷயத்தை வைத்து இந்திய ஊடகங்கள் முட்டாள்தனமான விவாவத்தை உருவாக்கி வருகின்றன.  தோனியை ராணுவ வீரராக்கி சிரியா, ஆப்கானிஸ்தான் அல்லது ரவாண்டாவுக்கு அனுப்பி வையுங்கள்’ எனக் கடுமையாக சாடியுள்ளார்.