செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By mahendran
Last Updated : செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (17:13 IST)

ஆண்டர்சனின் பந்து பேசுகிறது… ஷேன் வார்ன் புகழாரம்!

இங்கிலாந்து அணியின் ஆண்டர்சன் மற்றும் ஓய்லி ராபின்சனின் பந்துகள் பேசுகின்றன என ஷேன் வார்ன் புகழாரம் சூட்டியுள்ளார்.

நடந்து வரும் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. லீட்ஸ் டெஸ்ட்டில் இந்திய அணி இன்னிங்ஸ் டெஸ்ட்டில் தோல்வி அடைந்துள்ளது. இங்கிலாந்து அணியின் ஆண்டர்சன் மற்றும் ராபின்சன் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர்.

இதுபற்றி பேசியுள்ள ஷேன் வார்ன் ‘ஆண்டர்சன் மற்றும் ராபின்சன் ஆகியோரின் பந்துகள் பேசுகின்றன. இருவரும் இந்திய அணியை வேட்டையாடுகின்றனர். எல்லா டெக்னிக்குகளும் சவாலாக அமைகின்றன’ எனக் கூறியுள்ளார்.