திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (10:42 IST)

மிமி ரீமேக்கில் நயன்தாரா இல்லையாம்… கீர்த்தி சுரேஷுடன் பேச்சுவார்த்தை!

கிரித்தி சனோன் மற்றும் பங்கஜ் திர்பாதி நடிப்பில் உருவாகி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி ஹிட்டான திரைப்படம் மிமி.

நடிகை க்ரித்தி சனோன் மற்றும் பங்கஜ் த்ரிபாதி நடிப்பில் உருவான திரைப்படம் மிமி.  ஒரு நடனப்பெண்ணின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவான இந்த படம் நெட்பிளிக்ஸில் வெளியாவதாக இருந்தது. இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். சமீபத்தில் வெளியான பரமசுந்தரி பாடல் இணையத்தில் வைரல் ஹிட்டானது. இந்த படம் கடந்த வாரம் நெட்பிளிக்ஸில் வெளியானது.

இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் தமிழ் ரீமேக் நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஆனால் இப்போது அந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.