1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 28 டிசம்பர் 2021 (19:50 IST)

அடுத்தடுத்து 7 விக்கெட்டுக்களை இழந்த தென்னாப்பிரிக்கா: ஷமி அசத்தல் பவுலிங்!

அடுத்தடுத்து 7 விக்கெட்டுக்களை இழந்த தென்னாப்பிரிக்கா: ஷமி அசத்தல் பவுலிங்!
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்று வரும் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி அடுத்தடுத்து ஏழு விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்தியா தனது முதல் இன்னிங்சில் கேஎல் ராகுல் அபார ஆட்டத்தால் 327 ரன்கள் குவித்த நிலையில் இன்று தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது
 
அந்த அணி சற்று முன் 7 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, முகமது ஷமி மிக அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார் என்பதும் ஷர்துல் தாக்கூர், பிம்ரா மற்றும் சிராஜ் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தென் ஆப்பிரிக்க அணி தற்போது 179 ரன்கள் பின்தங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது