செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 15 ஜனவரி 2021 (18:11 IST)

சவுரவ் கங்குலி மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் சவுரவ் கங்குலி தற்போது பிசிசிஐ தலைவராக இருக்கிறார் என்பது தெரிந்ததே. அவர் பிசிசி தலைவரான பின்னர் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு பல வெற்றியை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் திடீரென கங்குலிக்கு ஹார்ட் சம்பந்தமான பிரச்சானை ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது
 
இந்த நிலையில் கங்குலிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் அவருக்கு கவலைப்பட வேண்டிய அளவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றும் விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன 
 
சவுரவ் கங்குலி நெஞ்சுவலி சம்பந்தமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி அவரது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது