புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 8 ஜூன் 2021 (18:23 IST)

எனக்கும்தான் மனசு வலிக்கிறது ச்சாரி… மஞ்சரேக்கர் அஸ்வினுக்கு பதில்!

கிரிக்கெட் வீரர் அஸ்வின் குறித்து சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்த மேலும் மேலும் சர்ச்சைகளை வளர்த்து செல்கிறது.

இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும் தற்போதைய வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சரேக்கர் சர்ச்சைகளுக்குப் பெயர் போனவர். ஏற்கனவே ரவிந்தர ஜடேஜா குறித்து அவர் பேசியது சர்ச்சைகளைக் கிளப்பிய நிலையில் இப்போது ரவிச்சந்திரன் அஸ்வின் குறித்து பேசியுள்ளார். இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும் தற்போதைய வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சரேக்கர் சர்ச்சைகளுக்குப் பெயர் போனவர். ஏற்கனவே ரவிந்தர ஜடேஜா குறித்து அவர் பேசியது சர்ச்சைகளைக் கிளப்பிய நிலையில் இப்போது ரவிச்சந்திரன் அஸ்வின் குறித்து பேசியுள்ளார்.

இதுபோன்ற கருத்துகளை அவர் அடிக்கடி கூறி வருவதால் அவரின் இந்த கருத்து பலராலும் கேலி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவருக்கு நேரடியாக பதில் சொல்லாமல் மீம் ஒன்றின் மூலம் நக்கலாக பதிலளித்துள்ளார் அஸ்வின். அந்நியன் படத்தில் விக்ரம் விவேக்கிடம் ‘அப்படி சொல்லாதடா சாரி… மனசு வலிக்கிறது’ என்று அப்பாவியாக கூறுவதை மீமாக பகிர்ந்துள்ளார். அஸ்வினின் இந்த டிவீட் பலராலும் ரசிக்கப்பட்டு வருகிறது.

இதைப் பலரும் பகிர்ந்து மஞ்சரேக்கரை கடுப்பேற்ற அவரும் அதே புகைப்படத்தைப் பகிர்ந்து ‘ஒரு எளிய நேர்மையான கிரிக்கெட் விமர்சனக் கருத்து இவ்வளவு சர்ச்சைகளை உருவாக்குவதை பார்த்து எனக்கும் மனசு வலிக்கிறது’ எனக் கூறியுள்ளார்.