புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 1 ஜனவரி 2022 (14:51 IST)

டி காக்கின் டெஸ்ட் ஓய்வு முடிவை கடுமையாக விமர்சித்த வீரர்!

சமீபத்தில் தென் ஆப்பிரிக்கா விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குயிண்ட்டன் டி காக் தன்னுடைய 29 ஆவது வயதிலேயே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

தென் ஆப்பிரிக்க அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவர் குயிண்ட்டன் டிகாக். ஆனால் கடந்த சில மாதங்களாக அவர் மோசமான பார்மில் இருக்கிறார். இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் போட்டி முடிந்ததும் தனது டெஸ்ட் போட்டிகளுக்கான ஓய்வை அறிவித்துள்ளார். இதற்குக் காரணமாக குடும்பத்தோடு அதிக நேரம் செலவிட விரும்புவதே என அவர் கூறியுள்ளார்.

இதுபற்றி பேசியுள்ள பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட்டர் சல்மான் பட் ‘இதுபோல திடீரென்று வீரர்கள் ஓய்வை அறிவிப்பது எல்லாம் வெறும் நாடகம். இவர்கள் எல்லாம் வெளிநாட்டு லீக் போட்டிகளுக்காக 2 மாதம் குடும்பத்தை விட்டு பிரிந்து விளையாடுவதில்லையா?’ என ஐபிஎல் போன்ற பணம் கொட்டும் லீக் போட்டிகளில் அதிகமாக விளையாடுவதற்காகதான் இப்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக விமர்சனம் செய்துள்ளார்.