வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 15 ஜூன் 2021 (22:26 IST)

குளிர்பானம் வேண்டாம்....ரசிகர்களுக்கு ரொனால்டோ அட்வைஸ்

உலகளவில் கால்பந்து விளையாட்டு வீரர் ரோனால்டோவுக்கு அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். அவரது சமூக வலைதளக் கணக்குகளாக ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற பக்கத்தில் பல மில்லியன் ரசிகர்கள் அவரை ஃபாலோ செய்கிறார்கள்.

அதுமட்டுமின்றி அவருக்கு சிறுவர்கள் முதல் முதியோர் வரை பலரும் அவருக்கு ரசிகர்களாக உள்ளனர்.

இந்நிலைய்ல் சில நாட்களுக்கு முன் யூரோ 2021 சேப்பியன் தொடர் தொடங்கியுள்ளது. இதில் முன்னணி அணிகள் பங்கேற்று சிறப்புடன் விளையாடி வருகின்றன.

இதன் ஒருபகுதியாக செய்தியாளர்கள் சந்திப்பின்போது,  தன் முன் இருந்த கோக்க கோலா பாடியலை ஓரத்தில் வைத்து ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு கோக்க கோலாவிற்குப் பதில் தண்ணீர் குடிக்குமாறு அறிவுறுத்தினார்.

இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.