வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 15 ஜூன் 2021 (10:00 IST)

இந்தியா ஈசியா கப் அடிக்கும்… ஆஸி கேப்டன் கருத்து!

இங்கிலாந்தில் நடக்க உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை இந்தியா எளிதாக வெல்லும் என ஆஸி கேப்டன் டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களாக நடந்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் முதல் இரண்டு இடங்களில் உள்ள இந்தியா மற்றும் நியுசிலாந்து ஆகிய அணிகள் மோத உள்ளன. உலகின் புகழ் பெற்ற மைதானமான இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் இந்த தொடர் நடக்க உள்ளது. இந்த போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்துடன் நடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை நியுசிலாந்து அணி வென்றிருப்பது அந்த அணிக்கு மேலும் பலத்தை கொடுத்துள்ளது. இதனால் நியுசியை எதிர்கொள்வது சவாலானதாக இருக்கும் எனப் பலரும் கூறிவருகின்றனர். இந்நிலையில் இப்போது ஆஸி டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெய்ன் ‘இந்தியா மட்டும் அவர்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விட்டால் எளிதாக போட்டியை வென்றுவிடும்’ எனக் கூறியுள்ளார்.