1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 21 ஜூலை 2018 (13:35 IST)

16 லட்சம் ரூபாயை டிப்ஸ்சாக வழங்கிய ரொனால்டோ

பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ, நட்சத்திர விடுதி ஊழியர்களுக்கு 16 லட்சம் ரூபாய் டிப்ஸாக கொடுத்துள்ளார்.
இந்த முறை நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பை திருவிழாவில், போர்ச்சுகல் அணி 2-வது சுற்றுடன் வெளியேறியது. இதனால் போர்ச்சுகல் அணி கேப்டன் ரொனால்டோவின் ரசிகர்கள் அதிருப்திக்கு ஆளானர்.
 
இந்நிலையில் ரொனால்டோ விடுமுறையை கழிக்க தனது குடும்பத்தினருடன், கிரீஸ் நாட்டில் கோஸ்டா நவரினோ என்ற நட்சத்திர விடுதியில் தங்கினார். அந்த ஓட்டல் நிர்வாகமும், ஊழியர்களும் சிறந்த முறையில் ரொனால்டோவின் குடும்பத்தினருக்கு சேவை செய்தனர்.
 
அவர்களின் உபசரிப்பால் ஆனந்தத்தில் ஆழ்ந்த ரொனால்டோ, ஓட்டலை விட்டு கிளம்பும் போது ஊழியர்களுக்கு ரூ.16 லட்சம் டிப்ஸாக கொடுத்து அவர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.