வியாழன், 14 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sinoj
Last Updated : வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (19:07 IST)

கின்னஸில் இடம்பிடித்த ரொனால்டோ

உலகிலேயே சர்வதேசக் கால்பந்து போட்டிகளில் அதிக கோல்கள் அடித்தவர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் ரொனால்டோ.

போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ அயர்லாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை தகுதிப் போட்டியில் இரண்டு கோல்களை அவர் அடித்தார். இவை அவருக்கு 110 மற்றும் 111-ஆவது கோல்களாக அமைந்தன.

1993 முதல் 2006 வரை ஈரானுக்காக ஆடிய அல் டாய் 109 சர்வதேச கோல்களை அடித்ததே இதுவரை சாதனையாக இருந்து வந்தது. உலகின் மிகச் சிறந்த வீரர் என்ற விவாதத்தில் இந்தச் சாதனையானது ரொனால்டோவுக்கு முன்னுரியை அளிக்க இருக்கிறது.

ரொனால்டோ இதுவரை அடித்த கோல்களில் கிட்டத்தட்ட பாதி எண்ணிக்கையிலானவை கடைசி 30 நிமிடங்களில் அடிக்கப்பட்டவையாகும்.

இந்நிலையில் சர்வதேச கால்பந்துப் போட்டியில் அதிக கோல்கள் அடித்துள்ள ரொனால்டோவின் சாதனை  கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்திருக்கிறது. இதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.  

சமீபத்தில் ஜுவெண்ட்ஸ் அணியில் இருந்து விலகிய மான்ஸ்செஸ்டர் யுனைட்டர் அணியில் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.