செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : ஞாயிறு, 20 நவம்பர் 2022 (09:41 IST)

இந்த உலகக் கோப்பையோடு ஓய்வு பெறுகிறார்களா மெஸ்ஸியும் ரொனால்டோவும்?.. ரசிகர்கள் அதிர்ச்சி!

2022ம் ஆண்டிற்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தாரில் இன்று முதல் தொடங்குகின்றன.

கத்தாரில்  பெண்கள் தங்களுக்கு விருப்பமான ஆடைகள் அணிய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வெளிநாடுகளில் இருந்து அந்த நாட்டிற்கு வரும் பெண்கள் கத்தாரின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு  நடக்க வேண்டும் எனவும்,  பொதுமக்கள் தங்களுக்கு விருப்பமான ஆடைகள் அணியலாம் என்றும், பொது இடங்களுக்கு செல்லும்போது தோள்கள் மற்றும் முழங்காலை மறைத்து ஆடை அணிந்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ள நிலையில் இன்று முதல் கால்பந்து திருவிழா நடக்கிறது.

கால்பந்தை பொறுத்தவரை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இரு துருவங்களாக இருந்து ரசிகர்களைக் கவர்ந்து வருபவர்கள் போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோவும், அர்ஜெண்டின வீரர் மெஸ்ஸியும்தான். இருவருமே தங்கள் கேரியரின் இறுதிக் கட்டத்தில் உள்ளனர்.

இந்நிலையில் இந்த உலகக்கோப்பை தொடரோடு அவர்கள் இருவரும் ஓய்வு பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.