திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 1 ஜனவரி 2023 (11:53 IST)

சவுதி அரேபிய க்ளப் அணியில் ரொனால்டோ! அணிக்கு எகிறிய மவுசு!

Ronaldo
பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ சவுதி அரேபிய க்ளப் அணியில் இணைந்த நிலையில் அதன் ஜெர்சிகள் மின்னல் வேகத்தில் விற்பனையாகி வருகிறதாம்.

உலக கால்பந்து வீரர்களில் மிகவும் பிரபலமாக உள்ளவர் போர்ச்சுக்கல் நாட்டு கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் நாட்டிற்காக உலக கால்பந்து போட்டிகளில் விளையாடி வரும் ரொனால்டோ, க்ளப் ஆட்டங்களில் பிஎஸ்ஜி க்ளப் அணிக்காக விளையாடி வந்தார்.

சமீபத்தில் இவர் அந்த க்ளப்பின் மேனேஜரோடு எழுந்த முரண்பாடால் விலகிய நிலையில் சவுதி அரேபியாவின் ‘அல் நஸர்’ என்ற க்ளப்பில் இணைந்துள்ளார். இதனால் அல் நஸர் அணியின் பெயர் மிகவும் புகழ்பெற்றுள்ளது.

இதுநாள் வரை இன்ஸ்டாகிராமில் வெறும் 8.40 லட்சம் பாலோவர்களே இருந்த நிலையில் ரொனால்டோ அணியில் இணைந்த சில நாட்களில் பாலோவர்கள் எண்ணிக்கை 53 லட்சத்தை தாண்டியுள்ளது. ரொனால்டோவின் லக்கி எண்ணான 7ம் நம்பரில் வெளியிடப்பட்டுள்ள அல் நசர் அணியின் ஜெர்சியையும் உலகம் முழுவதிலுமிருந்து பலரும் ஆர்டர் செய்து வருவதால் ஜெர்சிக்கு தட்டுப்பாடே எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

Edit By Prasanth.K