புதன், 18 செப்டம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 5 ஜூலை 2024 (15:08 IST)

இன்று முதல் பிரம்மாண்டமாக தொடங்குகிறது டிஎன்பிஎல் சீசன் 8: எந்த சேனலில் ஒளிபரப்பு?

டிஎன்பிஎல் என்ற தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 8ஆவது சீசன் இன்று முதல் தொடங்குகிறது. கோவை, திருநெல்வேலி, சேலம், திண்டுக்கல் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் இந்த சீசனின் போட்டிகள் நடத்தப்படுகிறது.
 
இன்று தொடங்கும் டிஎன்பிஎல் போட்டித்தொடர் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை ஒரு மாதம் நடைபெறுகிறது. இதில் பிளே   ஆப் மற்றும் இறுதிப் போட்டி உள்பட மொத்தமாக 32 போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஒவ்வொரு போட்டியும் இரவு 7.15 மணிக்கு தொடங்கும். ஒரே நாளில் 2 போட்டிகள் இருக்கும் போது பிற்பகல் 3.15 மணிக்கும், இரவு 7.15 மணிக்கும் போட்டிகள் நடத்தப்படுகிறது.
 
டிஎன்பிஎல் தொடரின் முதல் போட்டி இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 ஹெச்டி சேனலில் காணலாம்.
 
Edited by Siva