பிருத்விஷா என் அறிவுரையைக் கேட்கவில்லை… மனம் திறந்த ரிக்கி பாண்டிங்!
டெல்லி அணியின் இளம் வீரர் பிருத்விஷா தன்னுடைய பயிற்சி முறைகளை ஏற்றுக்கொள்ளவில்லை எனக் கூறியுள்ளார்.
ஐபிஎல் போட்டிகளில் அதிகளவில் இளம் வீரர்களைக் கொண்ட டெல்லி அணி உள்ளது. கடந்த ஆண்டு இறுதிப்போட்டி வரை வந்து கலக்கியது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரராக இருந்த பிருத்விஷாவுக்கு மோசமான தொடராக அது அமைந்தது. இதுகுறித்து அந்த அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் மனம்திறந்து பேசியுள்ளார்.
அதில் பிருத்வி ஷாவிடம் பேசி அவருக்கு அறிவுரைகளை வழங்கி அவரின் சிறப்பான ஆட்டத்திறனை வெளிக்கொண்டுவரவேண்டும் என நான் விரும்பினேன். ஆனால் அவரின் திட்டங்கள் வேறுவிதமாக இருந்தன. குறைவாக ரன் சேர்க்கும்போது பிராக்டீஸ் செய்யமாட்டார். ஆனால் அதிகமாக ரன்கள் அடிக்கும் போது அதிக நேரம் நெட்டில் பயிற்சி செய்வார். நான் பயிற்சிக்கு அழைக்கும்போது என்னிடம் பேட் செய்ய விருப்பமில்லை எனக் கூறிவிட்டார். ஆனால் இப்போது கடுமையாக உழைத்திருப்பார் என்று நினைக்கிறேன் எனக் கூறியுள்ளார்.