அண்ணா மற்றும் கலைஞர் சமாதியில் ஸ்டாலின் குடும்பத்தினர்!

Last Updated: செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (08:40 IST)

திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் சமாதியில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து தமிழக அரசியல் தலைவர்கள் எல்லோரும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின், அவர் மனைவி துர்கா ஸ்டாலின், அவர்கள் மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் சமாதியில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதில் மேலும் படிக்கவும் :