செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 3 ஜூன் 2021 (13:22 IST)

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்… 3 இறுதி ஆட்டங்கள் வேண்டும் – ரவிசாஸ்திரி கோரிக்கை!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆட்டத்தின் இறுதி ஆட்டம் 3 போட்டிகளாக நடத்தப்பட வேண்டும் என் இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களாக நடந்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் முதல் இரண்டு இடங்களில் உள்ள இந்தியா மற்றும் நியுசிலாந்து ஆகிய அணிகள் மோத உள்ளன. உலகின் புகழ் பெற்ற மைதானமான இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் இந்த தொடர் நடக்க உள்ளது.

இந்த தொடர் குறித்து கூறியுள்ள இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ‘இரண்டரை ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் தொடரின் இறுதிப் போட்டி 3 போட்டிகளாக நடந்தால் சிறப்பாக இருக்கும். ஒரே ஆட்டத்தின் மூலம் வெற்றியாளரை தீர்மானிப்பது சரியல்ல.  எதிர்காலத்தில் 3 போட்டிகளாக நடத்த வேண்டும்.’ எனக் கூறியுள்ளார்.