புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 23 டிசம்பர் 2018 (15:37 IST)

ஜடேஜா ,இஷாந்த் ஷர்மா சண்டையை ரசித்தேன் – ரவி சாஸ்திரி அடடா பதில்

பெர்த் டெஸ்ட்டில் இந்தியா மோசமான தோல்வியடந்ததை அடுத்து இந்திய அணியின் மீதும் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் மீதும் பல்வேறு விமர்சனங்கள் எழ ஆரம்பித்துள்ளன.

சமீபத்தில் பெர்த்தில் நடந்த 2 வது டெஸ்ட் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் படுமோசமாகத் தோல்வியடைந்தது. இதற்கு விளையாடும் வீரர்கள் கொண்ட அணித்தேர்வு முக்கியக் காரணம் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் களத்தில் ஜடேஜா- இஷாந்த் ஷர்மா இடையே நடந்த வாக்குவாதம் குறித்தும் அதைக் கேப்டன் கோஹ்லி சரியாகக் கையாளவிலலை என்றும் பலப் புகார்கள் எழுந்துள்ளன.

இவற்றிற்குப் பதிலளிக்கும் விதமாக பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இன்று ஆஸ்திரேலியாவில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது விமர்சன்ங்கள் குறித்தக் கேள்விகளுக்கு பதிலளித்த அவர் ’ இந்திய அணி சிறப்பாகத்தான் செயல்படுகிறது, குறைசொல்பவர்கள் லட்சக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்து கொண்டு எளிதாகக் குறை சொல்கிறார்கள். அவர்களின் விமர்சனங்கள் மிகத் தொலைவில் இருக்கிறது. விளையாடும் 11 பேரில் ரவிந்திர ஜடேஜாவை சேர்ப்பதா இல்லையா என்ற குழப்பம் இருந்தது உண்மைதான். நீண்ட ஆலோசனைக்குப் பின்பே அம்முடிவு எடுக்கப்பட்டது. மேலும் தொடருக்கான வீரர்களைத் தேர்வு செய்வது என்பது என் கையில் இல்லை. களத்தில் இஷாந்த் சர்மாவுக்கும், ஜடேஜாவுக்கும் நடந்த வாக்குவாதம் குறித்து நான் ஆச்சர்யப்படவில்லை.சிலக் கடினமான மேட்ச்களில் அதுபோல நடப்பது இயல்புதான். அந்த காட்சியை நான்  ரசித்தேன். இது போன்ற வாக்குவாதங்கள் வீரர்களுக்கு இடையில் நெருக்கத்தை அதிகமாக்கும்.’ எனக் கூறியுள்ளார்.