திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 7 டிசம்பர் 2018 (12:41 IST)

ஆஸ்திரேலியா மைதானத்தில் கெத்து காட்டும் இஷாந்த் சர்மா...

அடிலெய்டில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் இந்திய  வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா அசத்தலாக பந்து வீசி கிளீன் போல்ட் செய்ய,  ஆஸ்திரேலிய வீரர் பிஞ்ச் அவுட்டான சோகத்துடன் வெளியேறினார்.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில்பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணிக்கு தொடக்க வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்த , அடுத்து வந்த புஜாரா அணிக்கு பலமாக அமைந்தார். இதனால் இந்திய அணி இக்கட்டான நிலையில் இருந்து மீண்டது.
 
இந்நிலையில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 250 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஷமி முதல் பந்திலேயே ஆட்டம் இழந்ததால் முதல் இன்னிங்ஸில் 250 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
 
இதனையடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு பின்ஞ் மற்றும் ஹோரிஸ் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை இஷந்த் சர்மா தன் வழக்கமான வேகத்தில் வீசிக் கொண்டிருந்தார். மூன்றாவது பந்தை வீசிய போது அது மின்னல் வேகத்தில் வந்து ஸ்டெம்பை பதம் பார்த்தது. அதனால் பின்ஞ் அவுட்டானார்.
 
முதல் ஓவரை மெய்டன் செய்து, ஒரு  விக்கெட் எடுத்து இஷாந்த் அசத்தி உள்ளார்.