வியாழன், 28 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 6 செப்டம்பர் 2018 (12:54 IST)

சேவாக் குற்றச்சாட்டிற்கு பதிலடி கொடுத்த ரவி சாஸ்திரி

பேச்சை குறைத்துவிட்டு செயலில் காட்டுங்கள் என சேவாக்கின் குற்றச்சாட்டிற்கு இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பதிலடி கொடுத்துள்ளார்.
இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. இதனால், இந்திய அணி கேப்டன் கோலியையும், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியையும் ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் விமர்சகர்களும் இந்த தோல்வியை குறித்து விமர்சித்து வருகின்றனர்.
 
இதுகுறித்து பேசிய சேவாக், ரவி சாஸ்திரியின் செயல் பேச்சில் மட்டும்தான் உள்ளது. ரவி சாஸ்திரி பேச்சை குறைத்து, செயலில் காட்ட வேண்டும் என காட்டமாக கூறியிருந்தார்.
இந்நிலையில் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கடைசி டெஸ்ட் போட்டியில் நாங்கள் கடுமையாக போராடினோம். ஆனால் இங்கிலாந்து அணியினர் எங்களை விட சிறப்பாக விளையாடியதை மறுக்க முடியாது. 
 
இந்த ஒரு போட்டியை வைத்து மட்டுமே எங்களை கணிக்கக்கூடாது. கடந்த 3 ஆண்டுகளில் கோலி தலைமையிலான  இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் 9 டெஸ்ட் மேட்சுகளில் வெற்றி மற்றும் 3 தொடர்களை கைப்பற்றி உள்ளது.  15-20 ஆண்டுகளில் வேறு எந்த இந்திய அணியும்  இது போன்று சாதித்ததில்லை என்றார். ஆகவே வரலாறு தெரியாமல் யாரும் பேசக்கூடாது என கூறினார்.