வியாழன், 14 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 10 செப்டம்பர் 2019 (09:36 IST)

ரவிசாஸ்திரியின் சம்பளம் அதிகமாகிறது – ஆண்டுக்கு 10 கோடியா ?

இந்தியாவின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ரவிசாஸ்திரியின் சம்பளம் அதிகமாக வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் 2021 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இப்போது அவரது சம்பளம் ஆண்டுக்கு  ரூ.8 கோடியாக உள்ளது.

ஆனால் இனி அவரது சம்பளம் ஆண்டுக்கு 9.5 கோடி முதல் 10 கோடி ரூபாயாக அதிகரிக்கப்படலாம் என மும்பையில் இருந்து வெளியாகும் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதேப் போல பவுலிங் பயிற்சியாளர் பாரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர் ஆகியோரது சம்பளம் ரூ.3.5 கோடியாக அதிகரிக்கலாம் என்றும் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ராத்தோரின் ஆண்டு சம்பளம் ரூ.2.5 கோடி முதல் ரூ. 3 கோடி வரை இருக்கலாம் என்றும் கூறியுள்ளது. இந்த சம்பள உயர்வு செப் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.