ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 11 செப்டம்பர் 2021 (12:11 IST)

ஆப்கன் அணியின் கேப்டன் பதவியைத் துறந்த ரஷீத் கான்!

ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது உலகக் கவனம் முழுவதையும் அந்த நாட்டின் மீது விழ வைத்துள்ளது. இந்நிலையில் அந்நாட்டில் பெண்கள் கிரிக்கெட்டுக்கு தாலிபன்கள் தடை விதித்துள்ளனர். இந்நிலையில் உலகக்கோப்பை டி 20 தொடருக்கான அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

அதில் ரஷீத் கானே கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருந்தார். ஆனால் அணி தேர்வில் ஒரு கேப்டனாக தன்னை கலந்து விவாதிக்காமல் அறிவித்ததால் அணித் தலைவர் பதவியில் இருந்து தான் விலகுவதாகவும், அணிக்கு ஒரு வீரராக மட்டும் தொடர உள்ளதாகவும் ரஷீத் கான் அறிவித்துள்ளார்.