திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 20 ஜனவரி 2023 (19:36 IST)

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்; தமிழ்நாடு அணி அபார வெற்றி

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்;  தமிழ்நாடு அணி அபார வெற்றி
ranjith
ரஞ்சித் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் பி பிரிவில் தமிழ்நாடு மற்றும் அசாம் அணிகளான போட்டியில் தமிழ்நாடு அபார வெற்றி பெற்றுள்ளது. 
 
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங் செய்து 540 ரன்கள் எடுத்தது
 
இதனை அடுத்து பேட்டிங் செய்த அசாம் அணி 266 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனை அடுத்து ஃபாலோ ஆன் ஆன அசாம் மீண்டும் இரண்டாவது இன்னிசை விளையாடிய நிலையில் அந்த அணி 204 ரன்கள் மட்டுமே எடுத்தால் தமிழ்நாடு அணி ஒரு இன்னிங்ஸ் மட்டும் 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
 
Edited by Siva