திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: சனி, 15 ஜூலை 2017 (07:03 IST)

2011 உலக்கோப்பையில் இந்தியாவின் வெற்றியில் சந்தேகம்: ரணதுங்கா பரபரப்பு தகவல்

கடந்த 2011ஆம் ஆண்டு மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை அணியை இந்திய அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



 
 
இந்த போட்டியில் சேவாக் 0, தெண்டுல்கர் 18 ரன்களில் அவுட் ஆனதால் இலங்கை வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்ட நிலையில் இலங்கை அணி தோல்வி அடைந்தது சந்தேகத்துக்குரியதாக இருப்பதாக முன்னாள் இலங்கை கேப்டன் ரணதுங்கா தனது ஃபேஸ்புக்கில் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
 
இப்போதே என்னால் எல்லாவற்றையும் வெளியிட முடியாது என்றும் ஆனால் விரைவில் இதுகுறித்த ஆதாரங்களை வெளியிடுவேன் என்றும் அவர் தனது ஃபேஸ்புக்கில் கூறியுள்ளார். இந்த போட்டியின்போது ரணதுங்கா வர்ணனையாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.