1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (12:16 IST)

மூன்றாவது முறையாக உலக சாம்பியனை வீழ்த்திய பிரக்யானந்தா! – கிரிப்டோ செஸ் தொடர்!

pragnanandha
மியாமியில் நடந்த க்ரிப்டோ கோப்பை செஸ் தொடரில் உலக சாம்பியன் கார்ல்சனை தமிழக வீரர் பிரக்யானந்தா வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

க்ரிப்டோ கோப்பை செஸ் தொடர் மியாமியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் 7வது சுற்றில் உலக சாம்பியன் கார்ல்சனும், தமிழக வீரர் பிரக்யானந்தாவும் மோதிக் கொண்டனர்.

இந்த தொடரின் பிரதான போட்டியில் பிரக்யானந்தாவும், கார்ல்சனும் 2-2 என்ற அளவில் சமநிலையில் இருந்தனர். இதனால் ஆட்டம் டை ப்ரேக்கிற்கு சென்றது. டை பிரேக்கரில் பிரக்ஞானந்தா கார்ல்சனை வென்றார்.

7 சுற்றுகளின் முடிவில் பிரக்ஞானந்தா இரண்டாம் இடத்தை பெற்றார். இந்த ஒரு ஆண்டில் மட்டும் பிரக்ஞானந்தா நடப்பு சாம்பியனான கார்ல்சனை மூன்று முறை வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.