திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (16:20 IST)

மீண்டும் சென்னையில் சர்வதேச விளையாட்டு போட்டி: அமைச்சர் மெய்யநாதன் தகவல்

meyyanathan
சென்னையில் சமீபத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்ற நிலையில் மீண்டும் சென்னையில் சர்வதேச போட்டி நடைபெற இருப்பதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார் 
 
சென்னையில் முதல் முறையாக சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நடத்தப்பட இருப்பதாகவும், நுங்கம்பாக்கம் ஸ்டேடியத்தில் செப்டம்பர் 12ஆம் தேதி சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி  தொடங்குகிறது என்றும் ஒரு வாரம் இந்த போட்டி நடைபெறும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்
 
தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான உலக மகளிர் டென்னிஸ் போட்டி தற்போது சென்னையில் நடைபெற இருப்பதாகவும் இதற்காக உலகத்தரத்தில் மைதானத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார்.
 
செஸ் ஒலிம்பியாட் போட்டி போல் மக்களிடம் டென்னிஸ் போட்டி குறித்த விழிப்புணர்வு மேற்கொள்ளவும் தமிழ்நாடு டென்னிஸ் வீரர் வீராங்கனைகள் இந்த மைதானத்தில் பயிற்சி செய்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார்