திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 4 ஜனவரி 2021 (17:55 IST)

அரசியலில் ஈடுபட சொல்லி கங்குலிக்கு அழுத்தம்… அதனால்தான் மாரடைப்பு வந்ததா? அதிர்ச்சி தகவல்!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு அரசியலில் சேர சொல்லி அழுத்தம் கொடுத்ததால்தான் மாரடைப்பு ஏற்பட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் அசோக் பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் சவுரவ் கங்குலி தற்போது பிசிசிஐ தலைவராக இருக்கிறார். அவர் தலைமையில் அமீரகத்தில் கொரோனா காலத்திலும் ஐபிஎல் தொடர் சிறப்பாக நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று காலை கொல்கத்தாவில் அவர் வீட்டில் உடற்பயிற்சி மேற்கொண்டிருந்த போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு நடந்த பரிசோதனைகளில் அவரின் இதயத்துக்கு செல்லும் குழாய்களில் 3 அடைப்புகள் இருந்ததது கண்டுபிடிக்கப்பட்டு அவை ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மூலமாக நீக்கப்பட்டுள்ளன. சிகிச்சைக்குப் பின் அவர் உடல்நிலை மிகவும் சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கங்குலியை நேரில் சென்று நலம் விசாரித்தார் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி. பிரதமர் மோடியும் அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்துள்ளார்.

இந்நிலையில் மேற்கு வங்க மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான அசோக் பட்டாச்சார்யா அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்றைக் கூறியுள்ளார். அதில் அரசியலில் சேர சொல்லி கங்குலிக்கு சிலர் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். அவரை அரசியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொள்ள பார்க்கின்றனர். அதனால் அவர் மன அழுத்தத்துக்கு ஆளாகி இருக்கலாம். அதனால் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கலாம். நான் அவரிடம் அரசியலுக்கு வராதீர்கள் எனக் கூறிய போது அவர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை’ எனக் கூறியுள்ளார். கடந்த சில மாதங்களாக கங்குலியை பாஜகவில் இணைக்க முயற்சிகள் நடந்து வருவதாக சொல்லப்பட்டது.