செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 25 நவம்பர் 2020 (10:44 IST)

4 மாதங்களில் 22 முறை கொரோனா சோதனை – கங்குலி வெளியிட்ட ரகசியம்!

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கடந்த 4 மாதங்களில் 22 முறை கொரோனா சோதனை செய்துகொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஐபிஎல் தொடர் கொரோனா காரணமாக தாமதமாக ஐக்கிய அரபுகள் அமீரகத்தில் நடந்து முடிந்தது. இதற்காக பிசிசிஐ, வீரர்கள் அனைவரும் கடுமையான விதிமுறைகளுக்கு உள்ளாகினர். ஐபிஎல் போட்டிகளை சிறப்பாக நடத்தி முடித்ததற்கு பிசிசிஐ தலைவர் கங்குலியின் பங்கு அளப்பரியது. இது சம்மந்தமாக சமீபத்தில் பேசிய கங்குலி ‘கடந்த நான்கரை மாதங்களில்நான் 22 முறை கரோனா பரிசோதனை மேற்கொண்டேன். என்னை சுற்றி இருந்த பலருக்கு தொற்று ஏற்பட்டு இருந்தது. ஆனால் எனக்கு தொற்று இல்லை. ஐபிஎல் தொடருக்காக நாங்கள் 400 பேர் கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்தோம். எல்லோரும் பாதுகாப்பாக இருப்பதற்காக 4 ஆயிரம்சோதனைகள் மேற்கொள்ளப் பட்டன.’ எனக் கூறியுள்ளார்.