பாகிஸ்தானுக்கு வெற்றியை கொடுத்த மழை: தென்னாப்பிரிக்கா பரிதாபம்
ஐசிசி சாம்பியன்ஷிப் டிராபி கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தது. இந்தியாவுக்கு எதிராக மோசமான பவுலிங் மற்றும் பேட்டிங் செய்த பாகிஸ்தான் இந்த போட்டியில் பந்துவீச்சில் அசத்தியது. எனவே தென்னாப்பிரிக்கா 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 219 ரன்கள் மட்டுமே எடுத்தது
220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் 27 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 119 ரன்கள் எடுத்தபோது ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது. இதனால் டக்வொர்த் லீவீஸ் முறைப்படி பாகிஸ்தான் அணீ 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்க்கப்பட்டது.
இன்னும் 23 ஓவர்கள் இருந்த நிலையில் ஆட்டம் எந்த பக்கம் வேண்டுமானாலும் திசை திரும்பலாம் என்ற நிலையில் மழை காரணமாக பாகிஸ்தான் வெற்றி ப்ற்றது. இந்த போட்டியில் ஹசன் அலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.