செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 30 அக்டோபர் 2022 (16:16 IST)

நெதர்லாந்துக்கு எதிரான போட்டி: பாகிஸ்தானுக்கு முதல் வெற்றி!

netherland vs pak
நெதர்லாந்துக்கு எதிரான போட்டி: பாகிஸ்தானுக்கு முதல் வெற்றி!
நெதர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றதை அடுத்து அந்த அணிக்கு இந்த தொடரில் முதல் வெற்றி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
பாகிஸ்தான் அணி இதற்கு முன் இந்தியா மற்றும் ஜிம்பாவே அணிகளுக்கிடையிலான போட்டியில் தோல்வியடைந்த நிலையில் இன்று நெதர்லாந்து அணிக்கு எதிராக விளையாடியது.
 
இன்றைய போட்டியில் நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து வெறும் 91 ரன்கள் மட்டுமே எடுத்தது என்பது குறிபிடத்தக்கது 
 
இதனை அடுத்து 92 என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணி 13.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கடந்த இரண்டு போட்டிகளில் சரியாக விளையாடாத கேப்டன் பாபர் அசாம் இன்றைய போட்டியிலும் 4 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார்
 
இந்த நிலையில் பாகிஸ்தான் அணி 2 புள்ளிகளுடன் தற்போது புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இன்னும் இரண்டு போட்டிகள் மட்டுமே இருக்கும் நிலையில் பாகிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
 
Edited by Siva