1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. India SA Worldcup T20 match today

தென்னாப்பிரிக்காவை வீழ்த்துமா இந்தியா? – இன்று பலபரீட்சை!

Ind SA
உலகக்கோப்பை டி20 போட்டிகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் இன்று இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன.

உலகக்கோப்பை டி20 போட்டிகள் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகின்றன. சூப்பர் 12 அணிகளுக்கு இடையேயான டீம் 1 மற்றும் டீம் 2 பிரிவு அணிகளுக்குள் போட்டிகள் நடந்து வருகின்றன. டீம் 2ல் உள்ள இந்திய அணி இதுவரை 2 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் இரண்டு போட்டிகளிலும் வென்று 4 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.

தென்னாப்பிரிக்க அணி இரண்டு போட்டிகளில் ஒன்றில் வெற்றியும், மற்றோன்றில் ட்ராவும் ஆன நிலையில் 3 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் இன்று இரண்டு அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற உள்ளது.

இதில் வெற்றிபெறும் அணி கூடுதலாக இரண்டு புள்ளிகளை பெற்று முதலிடத்தை பெறலாம். இந்தியா தனது முதல் இடத்தை தக்க வைக்குமா? தென்னாப்பிரிக்கா இரண்டாவது இடத்திலிருந்து முதல் இடத்தை அடையுமா? என்ற எதிர்பார்ப்புடன் இன்றைய போட்டி மாலை 4.30 மணியளவில் தொடங்குகிறது.

Edited By Prasanth.K
அடுத்த கட்டுரையில்
151 ரன்கள் இலக்கு கொடுத்த வங்கதேசம்: 3 ஓவரில் 2 விக்கெட்டை இழந்த ஜிம்பாவே!