புதன், 18 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (20:45 IST)

ஷான் மசூத் அபார சதம்: முதல் இன்னிங்ஸில் 300க்கும் அதிகமான ரன்கள் குவித்த பாகிஸ்தான்

முதல் இன்னிங்ஸில் 300க்கும் அதிகமான ரன்கள் குவித்த பாகிஸ்தான்
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நேற்று தொடங்கிய முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுகளை இழந்து 312 ரன்கள் எடுத்துள்ளது
 
தொடக்க ஆட்டக்காரர் ஷான் மசூத் 150 ரன்கள் அடித்து அபாரமாக விளையாடி வருகிறாஅர். பாபர் அசாம்  69 ரன்களும், ஷதாப் கான் 45 ரன்களும் எடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இங்கிலாந்து தரப்பில் ஆர்ச்சர் 3 விக்கெட்டுக்களையும், வோக்ஸ் 2 விக்கெட்டுக்களையும், ஆண்டர்சன், பிராடு, பெஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது