செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 9 ஆகஸ்ட் 2024 (06:57 IST)

இந்திய வீரர் நீரஜ் சோப்ரா அபாரம்.. வெள்ளி வென்று அசத்தல்..!

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா, பாகிஸ்தானின் அர்ஷத் நதீம், செக் குடியரசு வீரர் யாகூப் வட்லெஜ்ச், ஜெர்மனியின் ஜூலியன் வெபர், கிரனேடா வீரர் ஆண்டர்சன் பீட்டர்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் நீரவ் சோப்ரா தனது முதல் முயற்சியில் எல்லை தாண்டி சென்றதால் அவருக்கு சிவப்பு கொடி காட்டப்பட்ட நிலையில் இரண்டாவது முயற்சியில் 89.45 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து அசத்தினார்.

இந்திய வீரரை போல் பாகிஸ்தான் வீரரும் எல்லைக்கோட்டை தாண்டியதாக சிவப்பு கொடி காட்டப்பட்ட நிலையில் இரண்டாவது முயற்சியில் அவர் ஒலிம்பிக்கில் இதுவரை யாரும் சாதிக்காத 92.97மீ ஈட்டி எறிந்து சாதனை படைத்தார்.

இதன் மூலம் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் தங்கப் பதக்கமும், இந்தியாவின் நீரஜ் சோப்ராவுக்கு வெள்ளிப் பதக்கமும், கிரனேடா நாட்டைச் சேர்ந்த ஆண்டர்சன் பீட்டர்ஸ் வெண்கல பதக்கமும் வென்றனர்.

Edited by Siva