1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 18 நவம்பர் 2021 (11:00 IST)

ஐசிசி டி 20 தரவரிசையில் இந்திய பவுலர்களுக்கு இடமில்லை!

டி 20 போட்டிகளுக்கான தரவரிசையில் இந்திய பவுலர்கள் ஒருவர் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடருக்கு பின்னான ஐசிசி டி 20 பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்களுக்கான தரவரிசையை வெளியிட்டுள்ளது. பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் முதலிடத்தில் தொடர்கிறார். டேவிட் மலான் மற்றும் மார்க்ரம் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

இந்திய வீரர் லோகேஷ் ராகுல் 6 ஆவது இடத்திலும், கோலி 8 ஆவது இடத்திலும் உள்ளனர். அதே போல பவுலர்களுக்கான தரவரிசையில் இந்திய பந்துவீச்சாளர்கள் ஒருவர் கூட இல்லை. இலங்கை வீரர் ஹசரங்கா, தப்ரைஸ் ஷம்ஸி மற்றும் ஆடம் ஸாம்பா ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளனர்.