திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 28 மே 2021 (07:47 IST)

ஐபிஎல் போட்டிக்காக அட்டவணையை மாற்ற முடியாது: இங்கிலாந்து உறுதி

ஐபிஎல் கிரிக்கெட் தொடராக தொடருக்காக இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளின் அட்டவணையை மாற்ற முடியாது என இங்கிலாந்து உறுதிபடக் கூறி உள்ளது 
 
இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் டெஸ்ட் தொடர் போட்டிகள் விரைவில் ஆரம்பமாக உள்ளன. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி முடிவடையும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டு உள்ளது
 
இந்த நிலையில் செப்டம்பர் மாதம் முதல் வாரத்திற்குள் போட்டிகள் முடியும் வகையில் அட்டவணையை மாற்றியமைக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டது
 
ஐபிஎல் போட்டியை நடத்துவதற்கு வசதியாக இந்த மாற்றத்தை இந்திய அணியின் கேட்ட நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதற்கு மறுப்பு தெரிவித்து உள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்காக இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் அட்டவணை மாற்ற முடியாது என்று உறுதிபட கூறி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது