செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 28 பிப்ரவரி 2021 (10:19 IST)

3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கும் ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது: அதிரடி அறிவிப்பு

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளின் டெஸ்ட் தொடர்கள் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. ஏற்கனவே முடிவடைந்த 3 டெஸ்ட் போட்டிகளில் இரண்டில் இந்தியாவும் ஒன்றில் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது 
 
இதனை அடுத்து மார்ச் 4 ஆம் தேதி நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் மார்ச் 12, மார்ச் 14, மார்ச் 16, மார்ச் 18, மற்றும் மார்ச் 25 ஆகிய நாட்களில் ஐந்து டி20 போட்டிகள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி ஏற்கனவே பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 4-வது டெஸ்ட் போட்டியிலும் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. 
 
ஆனால் அதே நேரத்தில் புனேவில் நடைபெறும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கு ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது என்று மகாராஷ்டிரா அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது