1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 19 அக்டோபர் 2023 (08:00 IST)

சரண்டர் ஆன ஆப்கானிஸ்தான்.. இந்தியாவை பின்னுக்கு தள்ளிய நியூசிலாந்து..!

நேற்று நடைபெற்ற நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் நியூசிலாந்து அணி இடம்  ஆப்கானிஸ்தான் அணி சரண்டர் ஆகி படுதோல்வி அடைந்தது. இதனால் 8 புள்ளிகளுடன் இந்தியாவை பின்னுக்கு தள்ளி நியூசிலாந்து புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
நேற்றைய போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 288 ரன்கள் எடுத்தது. 289 என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 34.4 ஓவர்களில் 139 ரன்களுக்கு ஆட்டமிழந்தது

இதனால் நியூசிலாந்து அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று இந்தியா மற்றும்  வங்கதேச அணிகளுக்கிடையில் ஆன போட்டி இருக்கும் நிலையில் இந்தியா இந்த போட்டியில் வெற்றி பெற்றால் முதல் இடத்தை பிடிப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது

Edited by Siva