புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : சனி, 4 நவம்பர் 2017 (18:48 IST)

நியூசிலாந்து டாஸ் வென்று முதலில் பேட்டிங்!

நியூசிலாந்து - இந்தியா அணிகள் இடையே நடைபெறும் இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.


 

 
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் ஒருநாள் தொடர் முடிவடைந்து தற்போது டி20 போட்டி தொடங்கியுள்ளது. ஒருநாள் போட்டி தொடரில் இந்திய அணி 2-1 என்ற புள்ளிக்கணக்கில் தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் இன்று தற்போது டி20 போட்டிகள் நடைபெறுகிறது. முதலாவது டி20 பொட்டியில் இந்திய 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. இன்று இரண்டாவது போட்டி நடைபெறுகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. கடந்த போட்டியில் இரண்டாவது பேட்டிங் செய்து தோல்வி அடைந்ததை அடுத்து. 
 
இம்முறை முதலில் களமிறங்க முடிவு செய்துள்ளது. அதிக ரன்கள் இலக்காக இருந்தால் இராண்டாவதாக பேட்டிங் செய்யும் அணிக்கி நிச்சயம் நெருக்கடி ஏற்படும். அதுவும் குறிப்பாக டி20 போட்டியில் நெருக்கடி அதிகமாகவே இருக்கும். இதை கணக்கில் கொண்டு தற்போது நியூசிலாந்து அணி முதலில் களமிறங்கியுள்ளது.